வெள்ளத்தில் சிக்கிய தம்பதி 5 நாட்களுக்குப் பின்னர் பத்திரமாக மீட்பு! | old aged couples rescued from flood after 5 days | News7 Tamil

இன்றைய வானிலை

  • 32 °C / 90 °F

Breaking News

Jallikattu Game

வெள்ளத்தில் சிக்கிய தம்பதி 5 நாட்களுக்குப் பின்னர் பத்திரமாக மீட்பு!

June 13, 2018 எழுதியவர் : arun எழுதியோர்
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
3071 Views

கேரள மாநிலம் அட்டப்பாடியில் வெள்ளப்பெருக்கில் சிக்கி 5 நாட்களாக தவித்துவந்த தம்பதியை நீண்ட போராட்டத்திற்குப் பின் தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். 

தமிழக - கேரள எல்லையில் அட்டப்பாடி பகுதியில் உள்ள சாவடியூர் கிராமத்தின் நடுவே பவானி ஆறு ஓடுகிறது. தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்த நிலையில் அட்டப்பாடி பகுதியில் பெய்த கனமழையால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 

ஆற்றைக் கடந்து விவசாயப் பணிக்குச் சென்ற சுகுணன், வல்சம்மா என்ற வயதில் முதிய தம்பதி வெள்ளத்தில் எதிர்பாராதவிதமாக சிக்கிக்கொண்டனர். இதையடுத்து, ஆற்றைக் கடந்து ஊருக்குள் வரமுடியாமல் கடந்த 5 நாட்களாக வெள்ளத்தின் நடுவே கனமழையில் சிக்கித் தவித்த அவர்களை மீட்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டனர். 

கடும் போராட்டத்திற்கு பின் முதிய தம்பதி 5 நாட்களுக்குப் பின்னர் இன்று பத்திரமாக மீட்கப்பட்டு அட்டப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

தற்போதைய செய்திகள் Aug 21
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹79.96/Ltr (₹ 0.13 )
  • டீசல்
    ₹72.29 /Ltr (₹ 0.13 )