இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

பவானியாற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு - கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

June 13, 2018 எழுதியவர் : arun எழுதியோர்
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
4258 Views

மேட்டுப்பாளையம் வனப்பகுதியிலுள்ள பில்லூர் அணையிலிருந்து வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டதால், பவானியாற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து, 100 அடி கொண்ட பில்லூர் அணை 4வது நாளாக நிரம்பி வழிகிறது. அணையின் பாதுகாப்பு கருதி, அணைக்கு வரும் நீர் அப்படியே பவானியாற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. 

இதனால் பவானி ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது தொடர் மழை எதிரொலியால் பில்லூர் அணைக்கான நீர்வரத்து 25 ஆயிரம் கனஅடியாக உயர்ந்த நிலையில், உபரி நீர், நான்கு மதகுகள் வழியாக பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டது. 

பவானி ஆற்றின் வெள்ளபெருக்கு காரணமாக பவானி சாகர் அனையின் நீர் தேக்க பகுதிகள் மற்றும் கரையோரம் உள்ள லிங்காபுரம், காந்தவயல் போன்ற பகுதிகளில் விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. 

வெள்ளப்பெருக்கால் தற்போது 10 ஆயிரம் வாழைகள் தண்ணீர் மூழ்கியுள்ளதாகவும், வெள்ளப்பெருக்கு தொடர்ந்தால், 20 லட்சம் வாழைகள் நீரில் மூழ்கும் அபாயம் இருப்பதாகவும் விவசாயிகள் கவலை தெரிவித்தனர். 

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

தற்போதைய செய்திகள் Oct 22
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )