இன்றைய வானிலை

  • 33 °C / 92 °F

Breaking News

Jallikattu Game

​சாத்தூர் அருகே வேன் தலைகீழாக கவிழ்ந்த விபத்தில் 6 பேர் பலி!

May 13, 2018
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1812 Views

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சாலையோர பள்ளத்தில் வேன் தலைகீழாக கவிழ்ந்த விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

மாதாங்கோவில்பட்டியை சேர்ந்த 25க்கும் மேற்பட்டோர் இன்று காலை சாத்தூர் அடுத்த இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு வழிபாட்டிற்காக சென்றனர். 

தரிசனம் முடித்த பிறகு, மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். தாயில்பட்டி அடுத்த ராமச்சந்திராபுரம் அருகே வந்த போது, வேனின் முன்சக்கர அச்சு முறிந்து, சாலையோர பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்தது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். 

தகவலறிந்து வந்த போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஒரு பெண் உயிரிழந்தார். 

முன்னதாக சம்பவம் நடந்த இடத்தை விருதுநகர் மாவட்ட எஸ்.பி.ராஜராஜன் பார்வையிட்டார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

எம்.எல்.ஏ பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக

கஞ்சா புகைப்பதை போலீசில் கூறிவிடுவேன் என மிரட்டி பணம்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை சிபிஐ விசாரிப்பதே

தற்போதைய செய்திகள் Jun 19
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 79.16 /Ltr (₹ -0.08 )
  • டீசல்
    ₹ 71.54 /Ltr