இன்றைய வானிலை

  • 29 °C / 85 °F

Jallikattu Game

தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை மையம் தகவல்!

March 13, 2018 எழுதியவர் : krishna எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
2835 Views

தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தமிழக கடலோரம் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மாலத்தீவு அருகே நிலை கொண்டுள்ளதாக தெரிவித்தார். 

இது லட்சத்தீவு நோக்கி நகரக் கூடும் என்பதால் கடலில் 45 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை பெய்யும் என்றும் அவர் கூறியுள்ளார்.

எனவே தென்தமிழகம், குமரி, லட்சத்தீவு, மாலத்தீவு உள்ளிட்ட பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பாபநாசத்தில் 4 செமீ மழையும், தொண்டியில் 2 செமீ மழையும் பெய்துள்ளதாகவும் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

தற்போதைய செய்திகள் Oct 22
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )