இன்றைய வானிலை

  • 29 °C / 85 °F

Breaking News

Jallikattu Game

​சின்னமலை - தேனாம்பேட்டை சுரங்க வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்!

March 13, 2018 எழுதியவர் : arun எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1164 Views

சென்னையில் சின்னமலை முதல் தேனாம்பேட்டை வரையிலான சுரங்க வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் தொடங்கியுள்ளது.  

சென்னையில் விமானம் நிலையம் முதல் விம்கோ நகர் வரையிலும், பரங்கிமலை முதல் சென்ட்ரல் வரையிலுமாக இரண்டு வழித்தடத்தில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

அதில் பணிகள் முடிக்கப்பட்ட சுமார் 29 கிமீ தூரத்திற்கு மெட்ரோ ரயில் சேவை வழங்கப்பட்டு வருகின்றது. மீதமுள்ள தூரத்தில் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 

பரங்கிமலை முதல் செண்ட்ரல் வரையிலான வழித்தடத்தில் நேரு பூங்கா -  செண்ட்ரல் இடையே  அடுத்த மாதம் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.  

சென்னை விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரையிலான வழித்தடத்தில் சின்னமலை - தேனாம்பேட்டை இடையேயான சுரங்க வழித்தடத்தில் பணிகள் முடிவடைந்த நிலையில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 

ஜூன் மாதத்திற்குள் அந்த பகுதியில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

தற்போதைய செய்திகள் Sep 23
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.41/Ltr (₹ 0.10 )
  • டீசல்
    ₹78.10 /Ltr (₹ 0.10 )