இன்றைய வானிலை

  • 29 °C / 85 °F

Breaking News

Jallikattu Game

​திருமணமான 45 நாளில் குரங்கணி காட்டுத் தீயில் கருகிய இளம் பெண் புனிதா!

March 13, 2018 எழுதியவர் : arun எழுதியோர்
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
3182 Views

திருமணமான 45 நாளில் காட்டுத்தீக்கு இரையாகியுள்ள ஐ.டி ஊழியர் புனிதாவின் மரணம் அவரது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த 26 வயது இளம் பெண்ணான புனிதாவிற்கும் ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி அவின்யூவைச்
சேர்ந்த பாலாஜி என்பவருக்கும் கடந்த ஜனவரி மாதம் 28ந்தேதி திருமணம் நடந்தது.

திருமணத்திற்கு பின் தன் கணவருடன் ஸ்ரீபெரும்புதூரில் வசித்து வந்த புனிதா  சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள சேப்பல் எனும் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.  

தனது நிறுவனத்தில் வேலை பார்க்கும் நண்பர்களுடன் இணைந்து குரங்கணி மலைக்கு சென்றிருந்த நிலையில் காட்டுத் தீக்கு இரையாகி உயிரிழந்துள்ளார்.  

புனிதாவின் கணவரும் ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றுபவர்தான். அவரும் மலையேற்றத்திற்கு செல்ல திட்டமிட்டிருந்த நிலையில் கடைசி நேரத்தில் அதனை அவர் ரத்து செய்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்ததாகக் கூறப்படுகிறது. 

புனிதா பலியான தகவலை தொலைகாட்சிகளில் கண்டு அதிர்ச்சியடைந்த  உறவினர்கள் உடனடியாக குரங்கணி மலைப் பகுதிக்குச் சென்று புனிதாவின் உடலை அடையாளம் காட்டினர். 

உடற்கூறு ஆய்விற்கு பின்னர் நேற்றிரவு புனிதாவின் உடல் செங்கல்பட்டில் உள்ள அவரது பெற்றோர் இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டு அஞ்சலிக்காக சிறிது நேரம் வைக்கபபட்டது. 

பின்னர் ஸ்ரீபெரும்பத்தூரில் உள்ள அவரது கனவர் பாலாஜியின் இல்லத்திற்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டது. திருமணமான 45 நாட்களில் புனிதா தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தது அவரது குடும்பத்தினரை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

தற்போதைய செய்திகள் Sep 23
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.41/Ltr (₹ 0.10 )
  • டீசல்
    ₹78.10 /Ltr (₹ 0.10 )