இன்றைய வானிலை

  • 33 °C / 92 °F

Breaking News

Jallikattu Game

கார் மீது பேருந்து மோதி ஏற்பட்ட கொடூர விபத்தில் இரண்டு பெண் உட்பட 5 பேர் உயிரிழப்பு!

March 13, 2018
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
4191 Views

கிருஷ்ணகிரி அருகே பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கார் மீது பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில் இரண்டு பெண் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

கிருஷ்ணகிரி - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சூளகிரி அருகே காமன்தொட்டி என்னும் இடத்தில் நள்ளிரவு 12-30 மணியளவில் கர்நாடக மாநிலத்திற்கு சொந்தமான அரசு பேருந்து கிருஷ்ணகிரி நோக்கி வந்து உள்ளது. 

அப்போது ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த கர்நாடக அரசு பேருந்து  திடீரென சாலையில் நடுவே உள்ள தடுப்புகளைக் கடந்து எதிர் திசையில் பெங்களூர் நோக்கி சென்ற ஒரு டெம்போ மீது மோதி, அதன் பின் வந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பேருந்து கார் மீது மோதியதில், கார் அப்பளம் போல் நசுங்கியது. காரில் பயணம் செய்த இரண்டு பெண்கள், மூண்டு ஆண்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் டெம்போ ஓட்டுநர், காரில் சென்றவர் என இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஒசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்த விபத்தில், காரை ஒட்டி வந்தவர் இடர்பாடுகளில் சீக்கிகொண்டதால் அவரது உடலை மீட்பதில் சீரமம் ஏற்பட்டது. நீண்ட போராட்டத்திற்க்கு பின்னர் உடல் எடுக்கப்பட்டு 5 பேர் உடல்களும் ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த விபத்தால் கிருஷ்ணகிரி பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உயிரிழந்தவர்கள் யார் எங்கிருந்து எங்கு செல்கின்றனர் என்கிற விபரம் தெரியவில்லை.

இது தொடர்பாக சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து கர்நாடக மாநில அரசு பேருந்து ஓட்டுநரிடம்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

எம்.எல்.ஏ பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக

கஞ்சா புகைப்பதை போலீசில் கூறிவிடுவேன் என மிரட்டி பணம்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை சிபிஐ விசாரிப்பதே

தற்போதைய செய்திகள் Jun 19
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 79.16 /Ltr (₹ -0.08 )
  • டீசல்
    ₹ 71.54 /Ltr