இன்றைய வானிலை

  • 29 °C / 85 °F

Popup

Breaking News

Jallikattu Game

​குன்றத்தூரில் செயின் பறிப்பில் ஈடுபட்ட பொழிச்சலூர் வாலிபர் கைது!

February 13, 2018
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
2641 Views

குன்றத்தூரில் இருசக்கரவாகனத்தில் சென்று பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். 

சென்னை அருகிலுள்ள குன்றத்தூர் அருகே இரண்டாம் கட்டளை என்ற பகுதியில் கடந்த 10-ம் தேதி சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த ஜெயஸ்ரீ என்பவரிடம் இருசக்கரவாகனத்தில் வந்த நபர்கள் தங்கச் செயினை பறித்துச் சென்றார். 

இதில் நிலை தடுமாறிய ஜெயஸ்ரீ கீழே விழுந்தார். இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி காமிராவில் பதிவாகியது. இதனை கொண்டு போலீசார் நடத்திய விசாரணையில் பொழிச்சலூர் பகுதியை சேர்ந்த சிவா (வயது 19) மற்றும் அவரது நண்பர் சாலமன் இருவரும் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது. 

புதுச்சேரியில் தலைமறைவாக இருந்த சிவாவை காவல்துறையினர் இன்று கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சிவாவின் நண்பர் சாலமனை காவல்துறையினர் தேடிவருகின்றனர். கைது செய்யப்பட்ட சிவா மீது இது போன்று பல்வேறு செயின் பறிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

வி.கே.சசிகலாவின் கணவரும், 'புதியபார்வை' இதழின் ஆசிரியருமான

விஷ்வ ஹிந்து பரிஷத்தின் ராமராஜ்ஜிய ரத யாத்திரை நாளை தமிழகம்

ஆன்லைன் பத்திரப்பதிவில் உள்ள குளறுபடிகள் 10 நாட்களில்

கிருஷ்ணகிரி அருகே பீர் பாட்டிலில் பாம்பு கிடந்ததால் மது

கடன் வாங்கி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு நினைவு மண்டபம்

தற்போதைய செய்திகள் Mar 20
மேலும் படிக்க...

Tamilrathna

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 74.87 (லி)
  • டீசல்
    ₹ 66.21 (லி)