இன்றைய வானிலை

  • 29 °C / 85 °F

Popup

Breaking News

Jallikattu Game

என்கவுன்டர் அச்சத்தால் சரணடைய காத்திருக்கும் சென்னை ரவுடி கும்பல்!

February 13, 2018
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1297 Views

சென்னை காவல்துறையினர் என்கவுன்டர் செய்துவிடுவார்களோ என்ற அச்சத்தில், ரவுடி பினுவின் எதிர் கோஷ்டியான ரவுடி ராதாகிருஷ்ணன் கும்பல் நீதிமன்றத்தில் சரணடைய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கடந்த சில தினங்களுக்கு முன், சென்னை மாங்காடு அருகே உள்ள மலையம்பாக்கத்தில், ரவுடி பினுவின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக நூற்றுக்கும் மேற்பட்ட ரவுடிகள் ஒன்று கூடினர். 

இதன் பின்னணியில், பிரபல ரவுடி அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் கும்பலை ஒழிக்க வேண்டும் என்ற திட்டம் இருந்ததாகக் கூறப்படுகிறது. சென்னையில் ஓய்ந்திருந்த ரவுடிகளுக்கிடையிலான குழு மோதல் மீண்டும் தலைதூக்கத் துவங்கியுள்ளதால், போலீசாருக்கு அது பெரும் தலைவலியாக மாறியுள்ளது. 

இந்நிலையில், ரவுடி பினு மற்றும் ரவுடி ராதாகிருஷ்ணன் கும்பலில் உள்ளவர்களை தீவிரமாக தேடி வரும் போலீசார், தேவைப்பட்டால் அவர்களை சுட்டுப் பிடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இதனால் அச்சமடைந்துள்ள ரவுடி ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது கும்பலைச் சேர்ந்த சில ரவுடிகள், நீதிமன்றத்தில் சரணடைய திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 
Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

வி.கே.சசிகலாவின் கணவரும், 'புதியபார்வை' இதழின் ஆசிரியருமான

விஷ்வ ஹிந்து பரிஷத்தின் ராமராஜ்ஜிய ரத யாத்திரை நாளை தமிழகம்

ஆன்லைன் பத்திரப்பதிவில் உள்ள குளறுபடிகள் 10 நாட்களில்

கிருஷ்ணகிரி அருகே பீர் பாட்டிலில் பாம்பு கிடந்ததால் மது

கடன் வாங்கி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு நினைவு மண்டபம்

தற்போதைய செய்திகள் Mar 20
மேலும் படிக்க...

Tamilrathna

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 74.87 (லி)
  • டீசல்
    ₹ 66.21 (லி)