இன்றைய வானிலை

  • 33 °C / 92 °F

Jallikattu Game

​புதிய பாடத்திட்டத்தில் நடத்தப்பட்ட தேர்வில் முன்னிலை பெற்ற ஆதி பொறியியல் கல்லூரி!

February 13, 2018
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1973 Views

பொறியியல் மாணவ, மாணவிகளின் கல்வித்தரத்தை உயர்த்தும் வகையில், அண்ணா பல்கலைக் கழகம் கொண்டு வந்த புதிய கல்விமுறையின்படி நடத்தப்பட்ட தேர்வில், காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகே சங்கராபுரத்தில் உள்ள ஆதி பொறியியல் மற்றும் தொழிற்நுட்பக் கல்லூரி முன்னிலை பெற்றுள்ளது.  

அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் தமிழகமெங்கும் 466க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. பொறியியல் மாணவ, மாணவிகளின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்காக, choice based credit system என்ற புதிய கல்வி முறையை அண்ணா பல்கலைக் கழகம், அண்மையில் அறிமுகம் செய்தது. 

இந்த புதிய முறையின்படி, கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் தேர்வுகள் நடைபெற்றன. இதன் முடிவுகள், கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இதில், 44 பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவ, மாணவிகளில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை. 

213க்கும்  மேற்பட்ட கல்லூரிகளில் 20 சதவீத மாணவ, மாணவிகள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர், 59 கல்லூரிகளில், 50 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்த தேர்வில், வேலூர், திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் சுற்றுவட்டாரத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளிலேயே, காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகே சங்கராபுரத்தில் உள்ள ஆதி பொறியியல் மற்றும் தொழிற்நுட்பக் கல்லூரி முன்னிலையில் உள்ளது. இதனை கல்லூரி நிர்வாகத்தினர் பெருமையுடன் தெரிவித்துள்ளனர்.

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

குற்றாலத்தில் ஆர்ப்பரித்து கொட்டும் அருவியில் குளிக்க

திருநெல்வேலி மாவட்டம் ராமநதி அணை மற்றும் கடனாநதி அணை

சென்னை - சேலம் இடையேயான பசுமை வழிச்சாலைக்காக 18 கிலோமீட்டர்

கோவையில், வேளாண் நிலங்களை கையகப்படுத்தி அன்னூர் புறவழிச்சாலை

தற்போதைய செய்திகள் Jun 22
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 78.89 /Ltr (₹ -0.15 )
  • டீசல்
    ₹ 71.44 /Ltr