இன்றைய வானிலை

  • 27 °C / 80 °F

Popup

Breaking News

Jallikattu Game

​காதல் திருமணம் செய்து கொண்ட தனது பெண்ணை கடத்திய தந்தை கைது!

December 13, 2017
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
5543 Views

காதல் திருமணம் செய்து கொண்ட தனது பெண்ணை கடத்திய தந்தை உட்பட 10 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

திருச்சி மாவட்டம் பேட்டவாய்த்தலை கிராமத்தைச் சேர்ந்த செல்வம் என்பவரின் மகளான ஸ்வேதா, புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையை சேர்ந்த மனிதநேயம் என்ற தலித் இளைஞரை காதலித்து கடந்த 20 நாள்களுக்கு முன்பாக பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்துள்ளார்.

கணவரின் வீட்டில் அவர் வசித்து வந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஸ்வேதாவின் தந்தை செல்வம் ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

இதையடுத்து, ஸ்வேதா நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, கணவர் மனிதநேயத்துடன்தான் தான் வாழப்போவதாக ஸ்வேதா கூறியதை அடுத்து, கணவருடன் செல்ல நீதிமன்றம் அனுமதி அளித்தது.

அவர்கள் பேருந்தில் சென்று கொண்டிருந்தபோது, மேலூர் அருகே, கார் மற்றும் வேனில் வந்த  ஸ்வேதாவின் தந்தை செல்வம் மற்றும் அவரது உறவினர்கள் பேருந்தை மறித்து, ஸ்வேதாவை காரில் கடத்திச் சென்றனர்.

மேலூர் காவல் நிலையத்தில் ஸ்வேதாவின் கணவர் புகார் அளித்ததையடுத்து, கரூர் ராயனூர் பகுதியில் இருந்து ஸ்வேதாவை மீட்ட போலீசார், அவரது தந்தை செல்வம் உட்பட 10 பேரை  பிடித்து விசாரணை மேற்கொண்டனர். 

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் வர்த்தக துறைமுகத்தை உடனே அமைக்க வலியுறுத்தி

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலயத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

ரவுடிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக வெளியான தகவலையடுத்து, சேலம்

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் தமக்கு கருத்து  வேறுபாடு

தனது அரசியல் பயணத்தை வரும் 21ந்தேதி முதல் தொடங்க உள்ள நடிகர்

தற்போதைய செய்திகள் Feb 19
மேலும் படிக்க...

Tamilrathna

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 74.74 (லி)
  • டீசல்
    ₹ 65.96 (லி)