இன்றைய வானிலை

  • 27 °C / 80 °F

Popup

Breaking News

Jallikattu Game

மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரியபாண்டி ராஜஸ்தானில் சுட்டுக்கொலை!

December 13, 2017
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
2927 Views

சென்னை கொளத்தூர் நகைக்கடையில் கொள்ளையடித்த கொள்ளையர்களை, ராஜஸ்தானில் பிடிக்க முயன்றபோது, மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரியபாண்டி சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கொளத்தூர் புதிய லட்சுமிபுரத்தில் உள்ள முகேஷ் குமார் என்பவரின் நகைக்கடையில் கடந்த நவம்பர் 16-ஆம் தேதி கொள்ளை சம்பவம் நடைபெற்றது. 

கடையின் மேற்கூரையில் துளையிட்டு உள்ளே புகுந்த கொள்ளையர்கள் மூன்றரை கிலோ தங்கத்தை கொள்ளையடித்துச் சென்றனர். இந்த கொள்ளை தொடர்பாக சென்ராம், சங்கர்லால் உட்பட 4 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட நிலையில், முக்கிய குற்றவாளிகளான சென்ராமின் மகன் நாதுராம் மற்றும் தினேஷ் சவுத்ரியை பிடிக்க 6 பேர் கொண்ட தனிப்படையினர் ராஜஸ்தான் சென்றனர். 

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே கொள்ளையர்களை பிடிக்க முயன்றபோது, இருதரப்புக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றுள்ளது. 

இதில் தனிப்படையில் இடம்பெற்றிருந்த காவல் ஆய்வாளர் பெரியபாண்டி உயிரிழந்தார். மேலும், கொளத்தூர் காவல் ஆய்வாளர் முனிசேகர் காயமடைந்துள்ளார்.

இதையடுத்து அம்பத்தூர் இணை ஆணையர் சந்தோஷ் தலைமையிலான போலீசார் ராஜஸ்தான் விரைந்துள்ளனர். ராஜஸ்தான் போலீசார் தமிழக போலீசாருக்கு போதிய ஒத்துழைப்பு கொடுக்காததே ஆய்வாளர் பெரியபாண்டி உயிரழப்புக்கு காரணமாகக் கூறப்படுகிறது. 
பெரியபாண்டியின் மனைவி பானு ரேகா, சுந்தர சோளபுரம் அரசு பள்ளியில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ரூபன் மற்றும் ராகுல் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். 

உயிரிழந்த பெரியபாண்டியின் உடலை, சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம் பகுதிக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் வர்த்தக துறைமுகத்தை உடனே அமைக்க வலியுறுத்தி

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலயத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

ரவுடிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக வெளியான தகவலையடுத்து, சேலம்

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் தமக்கு கருத்து  வேறுபாடு

தனது அரசியல் பயணத்தை வரும் 21ந்தேதி முதல் தொடங்க உள்ள நடிகர்

தற்போதைய செய்திகள் Feb 19
மேலும் படிக்க...

Tamilrathna

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 74.74 (லி)
  • டீசல்
    ₹ 65.96 (லி)