முகப்பு > தமிழகம்

தீபாவளிக்கு சென்னையில் இருந்து 11645 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

October 13, 2017

தீபாவளிக்கு சென்னையில் இருந்து 11645 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!


தீபாவளியையொட்டி சென்னையில் இருந்து 11,645 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த பேருந்துகள் அக்டோபர் 15ம் தேதி முதல் 17ம் தேதி வரை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 மேலும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நெரிசலை குறைக்கும் பொருட்டு சென்னையில் இருந்து தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களுக்கு செல்வதற்கான பேருந்துகளுக்கு என பிரத்யேகமாக பேருந்து நிலையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரங்கள்,

பேருந்துகள் புறப்படும் இடம்:

கோயம்பேட்டில் இருந்து வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, நெல்லை, செங்கோட்டை, பண்ருட்டி, விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சேலம், கோவை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பகுதிகளுக்கும்  திருவனந்தபுரம், எர்ணாகுளம், பெங்களூரு உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு செல்லவும் பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படும்.

ஆந்திரா செல்லும் பேருந்துகள்

வேலூர் செல்லும் பேருந்துகள், ஆந்திரா செல்லும் பேருந்துகள் அண்ணாநகர் மேற்கில் இருந்து இயக்கப்படும் எனவும், பூந்தமல்லியில் இருந்து ஆற்காடு, ஆரணி, வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஓசூர் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
கும்பகோணம், தஞ்சை உள்ளிட்ட திண்டிவனம் வழியாக செல்லும் பேருந்துகள் சானிட்டோரியத்தில் இருந்து இயக்கப்படும்.

புதுச்சேரி,கடலூர், சிதம்பரம் உள்ளிட்ட இடங்களுக்கு ஈசிஆர் வழியாக செல்லும் பேருந்துகள் சைதாப்பேட்டையில் இருந்து இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்