இன்றைய வானிலை

  • 27 °C / 80 °F

Popup

Jallikattu Game

தீபாவளி சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு இன்று தொடக்கம்

October 13, 2017
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
2247 Views

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன். இதற்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வரும் 15ம் தேதி முதல் 17-ம் தேதி வரை தமிழக அரசு சார்பில் 11 ஆயிரத்து 645 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

➤கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து வேளாங்கன்னி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, திருவனந்தபுரம், பண்ருட்டி, விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சேலம், கோவை, எர்னாகுளம், பெங்களூரு ஆகிய ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 

➤அண்ணாநகர் மேற்கு பணிமனை பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. 

➤பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து ஆற்காடு, ஆரணி, வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஓசூர் ஆகிய ஊர்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 

➤தாம்பரம் சானிட்டோரியம் பேருந்து நிலையத்திலிருந்து கும்பகோணம், தஞ்சாவூர் உள்ளிட்ட ஊர்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. 

➤சைதாப்பேட்டை மாநகர பேருந்து பணிமனையில் இருந்து புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் உள்ளிட்ட ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

மதுரை அருகே குடும்பத்தகராறில் சொந்த மகளை பெற்ற தந்தையே

மதுரை அருகே பெண் துப்புரவு பணியாளர்கள் இரண்டு பேர், சாலையோரத்தில்

ஆந்திர மாநிலம் கடப்பா அருகே ஏரியில் மர்மமான முறையில்

நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் சந்திப்பை இரண்டு உலகத்

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பாஜகவின் ஏஜென்ட் போல்

Tamilrathna

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 74.58 (லி)
  • டீசல்
    ₹ 65.83 (லி)