முகப்பு > தமிழகம்

டெங்கு காய்ச்சல் தொடர்பாக ஆய்வு செய்ய எய்ம்ஸ் மருத்துவக்குழு வருகை!

October 13, 2017

டெங்கு காய்ச்சல் தொடர்பாக ஆய்வு செய்ய எய்ம்ஸ் மருத்துவக்குழு வருகை!


தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் உயிர் பலி தொடர்ந்து வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கைகள் பற்றி ஆய்வு மேற்கொள்ள மத்திய குழு சென்னை வந்துள்ளது.

எய்ம்ஸ் மருத்துவர் அசுதோஷ் பிஸ்வாஸ் தலைமையில் 5 பேர் கொண்ட மருத்துவக் குழு நேற்றிரவு சென்னை விமான நிலையம் வந்தடைந்தது. குழந்தைகள் நல மருத்துவர் சுவாதி துப்லிஸ், கவுஷல் குமார், கல்பனா பர்வா, வினய் கர்க் ஆகியோர் இந்த மருத்துவக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

இன்று நடைபெற உள்ள அரசு செயலாளர்கள் கூட்டத்தில், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தும் இந்த மருத்துவக் குழு, எந்தெந்த இடங்களில் ஆய்வு நடத்துவது என்பதை முடிவு செய்ய திட்டமிட்டுள்ளது.

டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் பற்றி ஆலோசனைகள் வழங்கும் மருத்துவக் குழு, தமிழகத்தில் டெங்கு பாதிப்பு பற்றி மத்திய அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்