எச்.ராஜாவை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் அடைக்க திருமாவளவன் வேண்டுகோள்! | thirumavalavan iterated to arrest H raja under national security act | News7 Tamil

இன்றைய வானிலை

  • 33 °C / 92 °F

Jallikattu Game

எச்.ராஜாவை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் அடைக்க திருமாவளவன் வேண்டுகோள்!

January 13, 2018 எழுதியவர் : krishna எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
2829 Views

பாஜக தேசிய  தலைவர் எச்.ராஜாவை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் அடைக்க வேண்டுமென விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கவிஞர் வைரமுத்து ஒரு நாளேட்டில் ஆண்டாளின் பாடல்கள் குறித்து கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். அதில் அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளரின் கருத்து ஒன்றை மேற்கோள்காட்டியிருந்தார். ஆனால் அந்த கருத்தை அவர் வழிமொழிவதாக அக்கட்டுரையில் எங்கும் குறிப்பிடவில்லை. அந்த கட்டுரையை சாக்காக வைத்துக்கொண்டு ஆண்டாளை அவதூறு செய்துவிட்டார் என கவிஞர் வைரமுத்துவின் மீது பழி போட்டு அநாகரிகமாக பேசிவருகிறார். எச்.ராஜாவின் பேச்சு சாதி மதவெறியை கொண்டதாகவும் வன்முறையை தூண்டும் விதத்திலும் பொது அமைதியை குலைக்கும் விதத்திலும் உள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், எச்.ராஜா பெரியாரை இழிவு படுத்தியபோதும், இடதுசாரிகளை இழிவு படுத்தியபோதும், விடுதலை சிறுத்தைகளை வம்புக்கு இழுத்த போதும் ஒரு சில கட்சிகளைத் தவிர மற்றவர்கள் கண்டுகொள்ளாமல் மவுனம் காத்தனர். அரசும் வேடிக்கை பார்த்தது. அதனால் தான் அவர் மேலும் மேலும் வன்முறையை தூண்டும் விதத்தில் பேசி வருவதாக திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.

எச்.ராஜாவின் பேச்சு எப்படியாவது தமிழ்நாட்டில் கலவரத்தை மூட்டிவிட வேண்டும் என்ற அவரது தீய நோக்கத்தை வெளிப்படுத்துகிறது என்றும் இத்தகைய வெறுப்புப் பேச்சையும் பயங்கரவாதச் செயலாகவே கருதவேண்டும். எனவே, தொடர்ந்து சமூகத்தில் பதற்றத்தை உருவாக்கும் வகையில் பேசிவரும் எச்.ராஜாவை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யவேண்டும் என அந்த அறிக்கையில் தமிழக அரசை அவர் வலியுறுத்தி கேட்டுக்கொண்டுள்ளார்.

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹79.96/Ltr (₹ 0.13 )
  • டீசல்
    ₹72.29 /Ltr (₹ 0.13 )