இன்றைய வானிலை

  • 26 °C / 79 °F

Jallikattu Game

வைரமுத்து மற்றும் தினமணி நாளிதழுக்கு ஆதரவாக ஸ்டாலின் அறிக்கை!

January 13, 2018
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1640 Views

வைரமுத்துவுக்கு எதிராகவும், தினமணி நாளிதழுக்கு எதிராகவும் அராஜக கருத்துகளைத் தெரிவிப்பதும், மிரட்டுவதும் கடும் கண்டனத்திற்குரியது என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கவிஞர் வைரமுத்துவும், தினமணி நாளிதழும் வருத்தம் தெரிவித்து விட்ட நிலையிலும், இந்து மதத்தின் பாதுகாவலர்கள் என்ற போர்வையில் அராஜகமான கருத்துகளைத் தெரிவிப்பதும், பத்திரிக்கை அலுவலகத்தை முற்றுகையிடுவோம் என்று மிரட்டுவதும் நாகரீகம் அற்றது என தெரிவித்துள்ளார். 

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இதற்குக் கண்டனத்தைத் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ள மு.க. ஸ்டாலின், ஒரு சிலர் தங்களின் சுயநலனுக்காகவும், விளம்பர வெளிச்சத்திற்காகவும் அமைதி தவழும் தமிழகத்தில் வன்முறையைத் தூண்டும் விதத்தில் நடந்து கொள்வது ஏற்றுக் கொள்ள முடியாதது என குறிப்பிட்டுள்ளார். 

ஜனநாயகத்தில் கருத்துக்கு மாற்றுக் கருத்து மட்டும் இருக்க முடியுமே தவிர, அநாகரிகத்திற்கும் வரம்புமீறலுக்கும் நிச்சயம் தமிழகத்தில் இடமில்லை என்றும் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

பேருந்து கட்டண உயர்வு காலத்தின் கட்டாயம் என்று மத்திய

இன்னும் ஒரு வாரத்தில் பட்டாசு தொழிலாளர்கள் பிரச்சினைக்கு

திருச்சியில் பிச்சைக்காரர்களை உழைப்பாளிகளாக மாற்றியதற்காக

கோடியக்கரை சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது. 

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் பிளாஸ்டிக் குப்பைகள் குவிந்துள்ளதால்

தற்போதைய செய்திகள் Jan 21
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 74.75 (லி)
  • டீசல்
    ₹ 66.25 (லி)