​சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போகிப் பண்டிகை கொண்டாட்டம்! | Pogi celebrated in many places | News7 Tamil

இன்றைய வானிலை

  • 33 °C / 92 °F

Jallikattu Game

​சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போகிப் பண்டிகை கொண்டாட்டம்!

January 13, 2018 எழுதியவர் : Jeba எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1504 Views

சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போகிப் பண்டிகை இன்று காலை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

மார்கழி மாதத்தின் கடைசி நாளான இன்று போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பழையன கழிதலும், புதியன புகுதலும் என்னும் வாக்கிற்கு ஏற்ப சென்னையில் மக்கள் பழைய பொருட்கள், பாய், பழைய துணிகள் போன்றவைகளை எரித்து சிறுவர்கள் மேளம் அடித்து போகி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இதனால் பல பகுதிகளில் மார்கழி பனியை விரட்டும் அளவுக்கு புகை மூட்டம் காணப்படுகிறது.

சென்னை புறநகரான தாம்பரம், பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை முதல் கடும் பனி மூட்டம் நிலவி வருகிறது. மேலும், போகி பண்டிகைக்காக பழைய துணி, காகிதம், பொருட்களை எரித்ததால் புகைமூட்டமும் ஏற்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

இதேபோல், புகை மூட்டத்துடன் பனிமூட்டமும் காணப்பட்டதால் சென்னையில் விமான சேவை பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக இன்று அதிகாலை முதல் விமானங்கள் தரை இறங்காமலும், செல்ல முடியாமலும் மொத்தம் 40 விமானங்கள் பாதிக்கப்பட்டன. இதன் காரணமாக பல்வேறு நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள்  தெரிவித்தனர். மேலும், ரயில்களும் வேகம் குறைக்கப்பட்டு இயக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

சென்னையின் அண்டை மாவட்டமான திருவள்ளூரில் போகிப் பண்டிகையை மக்கள் உற்சாகமாக கொண்டாடினர். கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருவள்ளூர், ஆவடி என பல்வேறு பகுதிகளிலும் வீடுகளின் முன்பாக கூடிய சிறுவர்கள், பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்தி, போகிப் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர். இதன் காரணமாக எழுந்த புகை மூட்டமும், மூடு பனியும், வாகன ஓட்டிகளை அவதிக்கு உள்ளாக்கின. 

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் போகிபண்டிகையையொட்டி பழைய பொருட்களை தீயிட்டதால் புகைமூட்டம் ஏற்பட்டது. இதன்காரணமாக சாலையில் சென்ற வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டவாறு சென்றனர். இதானால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹79.96/Ltr (₹ 0.13 )
  • டீசல்
    ₹72.29 /Ltr (₹ 0.13 )