​பொங்கல் விடுமுறையை முன்னிட்டு பேருந்து நிலையங்களில் அலைமோதிய பயணிகள் கூட்டம்! | Passengers throng to Busstand to leave to native places | News7 Tamil

இன்றைய வானிலை

  • 33 °C / 92 °F

Jallikattu Game

​பொங்கல் விடுமுறையை முன்னிட்டு பேருந்து நிலையங்களில் அலைமோதிய பயணிகள் கூட்டம்!

January 13, 2018 எழுதியவர் : Jeba எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1934 Views

பொங்கல் தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து வெளியூர் செல்வதற்காக பயணிகள் கூட்டம் பேருந்து நிலையங்களில் அலைமோதியது. 

தமிழர் திருவிழாவான பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி சென்னையில் இருந்து பயணிகள் சொந்த ஊர் செல்வதற்கு ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பேருந்து நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. இந்நிலையில், போராட்டத்தை கைவிட்டு நேற்று போக்குவரத்து தொழிலாளர்கள் பணிக்கு திரும்பியதால் பல்வேறு நகரங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனால் கோயம்பேடு உள்ளிட்ட பல்வேறு பேருந்து நிலையங்களிலும் பயணிகள் கூட்டம் அலைமோதியது. 

இதனிடையே, சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு நடத்தினார். பொங்கலுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது குறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். சென்னையில் இருந்து கடந்த 2 நாட்களில் பொங்கல் கொண்டாடுவதற்காக சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அரசுப் பேருந்துகளில் சொந்த ஊர் சென்றதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹79.96/Ltr (₹ 0.13 )
  • டீசல்
    ₹72.29 /Ltr (₹ 0.13 )