இன்றைய வானிலை

  • 26 °C / 79 °F

Jallikattu Game

விவசாயத்திற்கான நீராதாரத்தை பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு திட்டம்!

January 13, 2018
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1376 Views

விவசாயிகளின் நீராதாரம் பாதுகாக்கப்படும் வகையில் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் தடுப்பணைகள் கட்டப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.

காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு மத்திய அரசிதழில் கடந்த 2013-ம் ஆண்டு வெளியிடப்பட்டதை நினைவுகூறும் வகையில், சேலம் மாவட்டம் மேட்டூர் அணைப்பூங்கா முன்பு ரூ.1 கோடி மதிப்பில் நினைவு தூண் அமைக்கப்பட்டுள்ளது. இதில் கலந்து கொண்டு நினைவுத்தூணை திறந்து வைத்த முதலமைச்சர் பழனிசாமி, ஜெயலலிதாவின் தொடர் போராட்டத்தால் கிடைத்த வெற்றி என்று குறிப்பிட்டார். 

குடிமராமத்து திட்டம் தொடங்கப்பட்டு, முதல் கட்டமாக 1,519 ஏரிகள் தூர்வாரப்பட்டுள்ளதாகவும், 2ம் கட்டமாக 2,065 ஏரிகளை தூர்வார ரூ.331 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

விவசாயிகளுக்கு தேவையான நீர் ஒரு சொட்டு கூட வீணாகாமல் தடுக்கும் வகையில் 3 ஆண்டுகளில் ரூ.1,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணைகள் கட்டப்படும் என்றும் நடப்பாண்டில் ரூ.350 கோடி ஒதுக்கப்படும் என்றும் முதலமைச்சர் கூறினார்.

முன்னதாக சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், ரூ.21.97 கோடி செலவில் புதிய மேம்பாலம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ரோகிணி தலைமையில் நடைபெற்ற விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று, புதிய மேம்பாலத்திற்கு அடிக்கல் நாட்டினார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சேலத்தில் 'பஸ்-போர்ட்'  அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு வருவதாக கூறினார். இதேபோன்று, மதுரை மற்றும் கோவையிலும் 'பஸ்-போர்ட்' அமைக்கப்படும் என்றார். 

குட்கா விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, இந்த விவகாரம், நீதிமன்றத்தில் இருப்பதால் கருத்து கூற இயலாது என குறிப்பிட்டார். வரும் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கான புதிய அறிவிப்புகள் வெளியாகும் என்றும் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்தார்.

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

பேருந்து கட்டண உயர்வு காலத்தின் கட்டாயம் என்று மத்திய

இன்னும் ஒரு வாரத்தில் பட்டாசு தொழிலாளர்கள் பிரச்சினைக்கு

திருச்சியில் பிச்சைக்காரர்களை உழைப்பாளிகளாக மாற்றியதற்காக

கோடியக்கரை சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது. 

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் பிளாஸ்டிக் குப்பைகள் குவிந்துள்ளதால்

தற்போதைய செய்திகள் Jan 21
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 74.75 (லி)
  • டீசல்
    ₹ 66.25 (லி)