இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

தமிழகம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் விநாயகர் சிலைகள் விற்பனை!

September 12, 2018 எழுதியவர் : nandhakumar எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
2019 Views

விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாளை கொண்டாடப்படவுள்ளதை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் விநாயகர் சிலைகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

திருச்சியில் ஆயிரத்து 500 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்படவுள்ளன. மாநகரப் பகுதியில் மட்டும் 500 இடங்களில் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக, தாமரை விநாயகர், யானை வாகனர், மூஷிக, வெற்றி விநாயகர் என பல்வேறு பல்வேறு தோற்றங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவை, 50 ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு, விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. காகிதகூழ், மண் மற்றும் எளிதில் கரையக்கூடிய பொருள்களை பயன்படுத்தி, இந்த சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. ராமருடன் விநாயகர், எலி விநாயகர், பாகுபலி விநாயகர் என பல்வேறு தோற்றங்களில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த சிலைகள், ஆர்டர்களின் பேரில் வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. 

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.41/Ltr (₹ 0.10 )
  • டீசல்
    ₹78.10 /Ltr (₹ 0.10 )