இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

​"மத்திய அரசு அடக்கி ஒடுக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும்" - சமக தலைவர் சரத்குமார்

September 12, 2018 எழுதியவர் : manojb எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
2110 Views

மத்திய அரசு மக்களை பற்றி சிந்தித்து திட்டங்களை செயல்படுத்த  வேண்டும், அடக்கி ஒடுக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தாமும், விஜயகாந்தும் திரையுலகில் இணைந்து பணியாற்றியதாகவும், தேவை ஏற்பட்டால் அரசியல் களத்திலும் அதேபோல் செயல்படுவோம் என்றும் குறிப்பிட்டார். உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தமிழகத்திற்கு மிக அவசியமானது எனக் குறிப்பிட்ட சரத்குமார், அனைத்து இடங்களிலும் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். 

மேலும், ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு பேரை விடுதலை செய்வது குறித்த கேள்விக்கு,
அவர்கள் ஏற்கனவே தண்டனை அனுபவித்து விட்டனர். அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதே என்னுடைய கருத்து. சுப்பிரமணியசாமி கருத்துரிமை இருப்பதால் அவர் கருத்தை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஊழல் அதிகமாக இருப்பது போல் குற்றம் சாட்டி தமிழகத்திற்கு அவமானத்மை ஏற்படுத்தும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது என்றார். 

அடுத்ததாக இந்திய பொருளாதாரம் வளர்ந்துள்ளது என பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ள கருத்து தொடர்பான கேள்விக்கு பொருளாதார வல்லுநர்களிடம்  பொருளாதார வீழ்ச்சி இருக்கிறதா இல்லையா என்பதை கேட்டு அவர் தெரிந்து கொள்ள வேண்டும்.

மத்திய அரசு மக்களை பற்றி சிந்தித்து திட்டங்களை செயல்படுத்த  வேண்டும், அடக்கி ஒடுக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்றும் தெரிவித்தார். 

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.41/Ltr (₹ 0.10 )
  • டீசல்
    ₹78.10 /Ltr (₹ 0.10 )