இன்றைய வானிலை

  • 28 °C / 82 °F

Jallikattu Game

முதல்வருக்கு எதிரான முறைகேடு புகார்: லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நீதிபதி உத்தரவு!

September 12, 2018 Posted By : nandhakumar Authors
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
5933 Views

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நெடுஞ்சாலை முறைகேடு புகாரில், தினந்தோறும் நடத்தப்பட்ட விசாரணை விவரங்களை தாக்கல் செய்யுமாறு, லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் சாலை அமைக்கும் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட ஒப்பந்தத்தில், 4 ஆயிரத்து 800 கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டர்களை தங்களது உறவினர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒதுக்கியதாகவும்,  இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யக்கோரியும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.  

இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது, அப்போது, நெடுஞ்சாலை திட்டங்களில் உலக வங்கியின் விதிகளை மீறி முதல்வரின் உறவினருக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதில், லஞ்ச ஒழிப்புத்துறையினர் முதல் தகவல் அறிக்கை கூட, பதிவு செய்யவில்லை எனவும் திமுக தரப்பில் வாதிடப்பட்டது.  

இதனை தொடர்ந்து வாதிட்ட அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், 1991-ஆம் ஆண்டில் இருந்து எஸ்.பி.கே நிறுவனம் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக கூறினார்.  முதல்வரின் மகன் என்பதால் அரசு ஒப்பந்தம் பெற தகுதியில்லையா எனவும் கேள்வி எழுப்பினார்.  

இதனை தொடர்ந்து, உறவினர்களுக்கு அரசு ஒப்பந்தங்கள் வழங்கிய குற்றச்சாட்டு குறித்து நடத்தப்பட்ட விசாரணை விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை வரும் 17 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
 

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )