இன்றைய வானிலை

  • 28 °C / 83 °F

Jallikattu Game

​ரஜினியின் பாதுகாப்பிற்காக 25 போலீஸ் அதிகாரிகளை நியமித்துள்ள உத்தரப் பிரதேச அரசு!

September 12, 2018 Posted By : manojb Authors
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
6497 Views

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் புதிய படத்தின் பெயர் 'பேட்ட' மற்றும் அதன் Motion Poster மற்றும் போஸ்டர் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியாகி உலக அளவில் டரெண்டானது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கி வரும் இப்படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் 2014ம் ஆண்டு வெளிவந்த ஜிகர்தண்டா திரைப்படம் ஒரு தரமான சம்பவம் என பலராலும் பாராட்டப்பட்டது.  

ஜிகிர்தண்டா வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜை நேரில் அழைத்துப் பாரட்டினார். அன்றே ரஜினிகாந்த் நான் சேது கதாப்பாத்திரத்தில் நடிக்க விரும்பினேன் என கார்த்திக் சுப்பாராஜிடம் தெரிவித்திருந்தார். அதுமட்டுமின்றி பாபி சிம்ஹாவின் நடிப்பை பார்த்தபோது தனக்கு 'பரட்டை' கதாபாத்திரம் ஞாபகம் வந்ததாக கூறியிருந்தார் ரஜினிகாந்த்.

'பேட்ட' படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்கிறார். திரிஷா, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, நவாசுதின் சித்திக் உள்ளிட்டோரும் இப்படத்தில் நடிக்கின்றனர். 

இப்படத்திற்கு இசை அமைத்து இருக்கிறார் ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்திரன். மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு டேராடூன், டார்ஜிலிங் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. மதுரையிலும் படப்பிடிப்பு நடக்க இருந்தது. ஆனால் சில காரணங்களால் சென்னை புறநகரில் பிரம்மாண்ட செட் போடப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்றது.

இப்படத்தில் ரஜினிகாந்த் கல்லூரி ஹாஸ்டல் வார்டன்னாகவும், விஜய்சேதுபதி வில்லனாகவும் நடிக்கிறார்கள் என சினிமா வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஜினி நடிக்க வேண்டிய பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது உத்தரப்பிரதேச மாநிலத்தில் லக்னோவில் நடைபெற்று வருகிறது. அதைத் தொடர்ந்து வாரணாசியிலும் படப்பிடிப்பு நடக்க இருக்கிறதாம். 

ஒருமாதம் அங்கு படப்பிடிப்பு நடக்க இருப்பதை தெரிந்த கொண்ட உத்திரப் பிரதேச அரசு ரஜினியின் பாதுகாப்பிற்காக 25 போலீஸ் அதிகாரிகளை நியமித்துள்ளனராம். அங்கு ‘பேட்ட’ படத்திற்கான முக்கிய காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. 

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )