முகப்பு > தமிழகம்

ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி நூதனப்போராட்டம்!

August 12, 2017

ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி நூதனப்போராட்டம்!


புதுக்கோட்டை மாவட்டம்  நெடுவாசலில்  ஹைட்ரோ கார்பன்  திட்டத்தை  ரத்து செய்ய  வலியுறுத்தி பெண்கள் மண்டியிட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆலங்குடி  அருகே  நெடுவாசலில்  ஹைட்ரோ கார்பன்  திட்டத்தை ரத்து செய்யக் கோரி பெண்கள்  மற்றும்  பொதுமக்கள் 2-வது கட்டமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

மண்சோறு சாப்பிடுவது, மரத்தில் தலைகீழாக தொங்குவது, தரையில் புரண்டு அழுவது என பல்வேறு வகையான நூதன போராட்டங்களில்  ஈடுபட்டு  வருகின்றனர். இந்நிலையில், 123வது  நாளான இன்று வெற்றிலையில் சூடம் ஏற்றி  நூதன  போராட்டத்தில்  ஈடுபட்டனர்.

மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினர். 

Categories : தமிழகம் : தமிழகம்

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்