முகப்பு > தமிழகம்

இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம் தொடர்பான டெண்டர் ரத்து!

August 12, 2017

இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம் தொடர்பான டெண்டர் ரத்து!


பொங்கல் பண்டிகைக்கான இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம் தொடர்பான டெண்டரை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. 

வரும் 2018-ம் ஆண்டு இந்த திட்டத்தின் கீழ் வேட்டி, சேலை நெய்வதற்கான நூல் கொள்முதல் செய்ய, கடந்த ஜூன் 22-ம் தேதி டெண்டர் விண்ணப்பங்கள் கோரி, பத்திரிகைகளில் விளம்பரம் வெளியானது. 

இந்த டெண்டரில் கலந்து கொள்ளும் நிறுவனங்கள், கழிவுநீரை வெளியேற்றவில்லை என மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் சான்றிதழ் பெற வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டிருந்தது. இதை எதிர்த்து ஸ்ரீவெங்கட்ராம் நூற்பாலை சார்பிலும், முருகானந்தம் என்பவர் சார்பிலும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி துரைசாமி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, வேண்டியவர்களுக்கு டெண்டரை ஒதுக்கும் வகையில், புதிய நிபந்தனை சேர்க்கப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், 50 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள டெண்டரை, இந்தியன் டிரேட் ஜர்னலில் வெளியிட வேண்டும் என்றும் சுட்டிக் காட்டப்பட்டது.

இதையடுத்து, விதிகளை பின்பற்றாமல் இந்த டெண்டர் வெளியிடப்பட்டதாக, நீதிபதி துரைசாமி  ரத்து செய்தார்.  மேலும்,  புதிய டெண்டர் கோர அரசுக்கு அனுமதியளித்தும் உத்தரவிட்டார். 

Categories : தமிழகம் : தமிழகம்

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்