இன்றைய வானிலை

  • 32 ° C / 90 °F

​மு.க.ஸ்டாலின் காணும் பகல் கனவு பலிக்காது: எடப்பாடி பழனிசாமி

November 12, 2017
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1451 Views

100 ஆண்டுகள் ஆனாலும் அதிமுக தழைத்தோங்கும் என்பதை தொண்டர்கள் நிரூபிக்க வேண்டிய தருணம் இது, என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் பழனிசாமி, தாமும் ஓபிஎஸ்-ம் இரட்டைக்குழல் துப்பாக்கியாக இணைந்து செயல்படுவோம், என கூறியதை மு.க.ஸ்டாலின் விமர்சித்ததற்கு கண்டனம் தெரிவித்தார். 

அதிமுக ஆட்சி நிலைக்கக்கூடாது என்று, மு.க.ஸ்டாலின் காணும் பகல் கனவு பலிக்காது என்றும், முதலமைச்சர் தெரிவித்தார். அதிமுக இன்னும் 100 ஆண்டுகள் கடந்தும் தழைத்தோங்கி நிற்கும், என்பதை தொண்டர்கள் நிரூபித்துக் காட்ட வேண்டிய தருணம் இது, என்று கூறிய எடப்பாடி பழனிசாமி அதிமுகவில்தான் சாதாரண தொண்டன்கூட முதல்வர் ஆகலாம் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். 

தமிழகத்தில் அடுத்தகட்டமாக 300 கோடி ரூபாய் செலவில் குடிமராமத்து பணிகள் துவங்கப்பட உள்ளதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். மேலும், 
நெல்லை மாவட்டத்தில் திசையன்விளையை தலைமையிடமாகக் கொண்டு, புதிய வருவாய் வட்டம் அமைக்கப்படும் என்றும், முதல்வர் அறிவித்தார். 

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தாமும் எடப்பாடி பழனிசாமியும் ஒன்றுபட்டதால் ஏற்பட்ட அதிர்ச்சியில், செய்வதறியாது மு.க.ஸ்டாலின் திகைப்பதாகவும், என்ன பேசுவதென்று தெரியாமல் பேசுவதாகவும் விமர்சித்தார். 

எந்த குடும்பத்தின் ஆதிக்கத்திற்கும் அடிபணியாமல், அதிமுக ஆட்சி தொடர்ந்து நீடிக்கும் என்றும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார். 

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

தருமபுரி மாவட்டம் பெண்ணாகரம் அருகே கழுத்து இறுக்கப்பட்ட

நடிகர் சசிகுமாரின் மைத்துனரும், அவரின் கம்பெனி புரொடக்‌ஷன்ஸ்

தற்போதைய செய்திகள் Nov 22
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 72.06 (லி)
  • டீசல்
    ₹ 61.43 (லி)