இன்றைய வானிலை

  • 31 °C / 87 °F

Jallikattu Game

ஆதரவற்ற குழந்தைகளுடன் பொங்கல் விழாவை கொண்டாடிய மாவட்ட ஆட்சியர்!

January 12, 2018
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1359 Views

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் நடராஜன் ஆதரவற்ற குழந்தைகளுடன் கும்மி அடித்து பொங்கல் விழாவை  கொண்டாடினார்.  

ராமநாதபுரம் மாவட்டம் அரண்மனை பகுதியில் அமைந்துள்ள அன்னை சத்தியா அரசு ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் உள்ளது. இங்கு சுமார் 200க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகள் தங்கி படித்து வருகின்றனர். பொங்கல் விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் நடராஜன் காப்பகத்திற்கு வந்து பொங்கல் வைத்து விழாவை கொண்டாடினார். அதனை தொடர்ந்து கிராமப்புற கும்மி பாட்டுக்கு மாணவிகள் நடனம் ஆடினர். 

பொங்கல் பண்டிகையொட்டி புதுச்சேரியில் பள்ளி மற்றும் கல்லூரியில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. புதுவை பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் மாணவியர் பாரம்பரிய உடையில் பொங்கல் கொண்டாடினர். இதேபோல் கோரிமேட்டில் உள்ள மதர்தெரசா கல்லூரி, லாஸ்பேட்டை ஆசிரியர் பயிற்சி கல்லூரி, உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளில் பொங்கல் விழா நடைபெற்றது.  

சேலம் அரசு மருத்துவமனையில், எய்ட்சால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தங்கள் குடும்பத்தினருடன் பொங்கலை கொண்டாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.  எய்ட்ஸ் கட்டுபாட்டு சங்கம் மற்றும் அரசு மருத்துவமனை இணைந்து மனிதநேயத்துடன் நடத்திய பொங்கல் விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களை மாற்று கண்ணோட்டத்தோடு பார்க்கும் நிலையை மாற்ற வேண்டும் என நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.   

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விளக்கம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடை விதித்து

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் போது

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு ஒரே மாற்று ஸ்டெர்லைட்

தற்போதைய செய்திகள் May 23
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 80.11 /Ltr (₹ 0.32 )
  • டீசல்
    ₹ 72.14 /Ltr (₹ 0.27 )