இன்றைய வானிலை

  • 27 °C / 80 °F

Popup

Breaking News

Jallikattu Game

​ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை கோரிய மனு தள்ளுபடி!

January 12, 2018
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1914 Views

பொங்கல் விழாவையொட்டி வரும் 14ம் தேதி அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தடை கோரிய மனுவை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்துள்ளது. 

மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த செல்வம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், கடந்தாண்டு நடந்த ஜல்லிக்கட்டில் அனைத்து சமூகத்தினருக்கும் உரிய பிரதிநிதித்துவம் வழங்கவில்லை என தெரிவித்திருந்தார். அடுத்தாண்டு முறையாக நடத்தப்படும் என உறுதியளிக்கப்பட்ட நிலையில், இந்தாண்டும் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படாமல் உள்ளதால் தடைவிதிக்க வேண்டும் என கோரியிருந்தார். 

இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வு முன்பு நடைபெற்றது. அப்போது ஆஜரான எதிர்மனுதாரர்கள், 30 நாட்களுக்கு முன்பே அறிவிப்பாணை வெளியிடப்பட்டதாகவும், அனைத்து சமூகத்தினரும் பங்கேற்க தடை இல்லை என்றும் தெரிவித்தனர். இதனையேற்ற நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் வர்த்தக துறைமுகத்தை உடனே அமைக்க வலியுறுத்தி

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலயத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

ரவுடிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக வெளியான தகவலையடுத்து, சேலம்

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் தமக்கு கருத்து  வேறுபாடு

தனது அரசியல் பயணத்தை வரும் 21ந்தேதி முதல் தொடங்க உள்ள நடிகர்

தற்போதைய செய்திகள் Feb 19
மேலும் படிக்க...

Tamilrathna

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 74.74 (லி)
  • டீசல்
    ₹ 65.96 (லி)