இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

கபினி அணையில் இருந்து காவிரியில் விநாடிக்கு 50,000 கனஅடி நீர் திறப்பு!

July 11, 2018 எழுதியவர் : nandhakumar எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1549 Views

கபினி அணையில் இருந்து காவிரியில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு விநாடிக்கு 45 ஆயிரம் கனஅடியிலிருந்து 50 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதனால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 70 அடியை தாண்டியுள்ளது.

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. திறக்கப்பட்ட உபரிநீர் கர்நாடக - தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடைந்தது. காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்தை பிலிகுண்டுலு பகுதியில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்தனர். இன்று மதியம் 12 மணி நேர நிலவரப்படி ஓகேனக்கல் ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 37 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதனால் ஒகேனக்கல் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன், அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால், ஆற்றில் பரிசல்களை இயக்கவும், அருவிகளில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், போலீசார், தீயணைப்பு படையினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, கபினி அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 50 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. 

தொடர் நீர் வரத்தால், மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு கணிசமாக உயர்ந்துள்ளது. 120 அடி கொள்ளளவை கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் 70 அடியை தாண்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )