​பத்தாம் வகுப்பு மாணவியை வன்கொடுமை செய்த வாலிபருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை! | 10 years jail who abused 10th standard girl in kanyakumari! | News7 Tamil

இன்றைய வானிலை

  • 32 °C / 90 °F

Breaking News

Jallikattu Game

​பத்தாம் வகுப்பு மாணவியை வன்கொடுமை செய்த வாலிபருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை!

July 11, 2018 எழுதியவர் : manojb எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1583 Views

கன்னியாகுமரி அருகே கீரிப்பாறையில் மாணவியை பாலியல் வன்புணர்வு செய்த இளைஞருக்கு பத்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து, நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

கீரிப்பாறை பகுதியில் கடந்த 2012ம் ஆண்டு, பத்தாம் வகுப்பு மாணவி பாட்டி வீட்டிற்குச் செல்லும்போது, அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்ற இளைஞர் இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று, ரப்பர் தோட்டத்தில் பாலியல் வன்புணர்வு செய்ததாக கூறப்படுகிறது. 

இது குறித்து மாணவியின் பெற்றோர் குழித்துறை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து, இளைஞர் ராஜேஷை போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து குழித்துறை விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில், குற்றவாளி ராஜேஷ்க்கு பத்து ஆண்டுகள் கடுங்காவல் மற்றும் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி ஜான் ஆர்டி சந்தோசம் தீர்ப்பு வழங்கினார். 

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

தற்போதைய செய்திகள் Aug 21
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹79.96/Ltr (₹ 0.13 )
  • டீசல்
    ₹72.29 /Ltr (₹ 0.13 )