இன்றைய வானிலை

  • 29 °C / 85 °F

Popup

Breaking News

Jallikattu Game

​சென்னையில் நகை பறிக்க முயன்ற போது பெண்மணிக்கு ஏற்பட்ட விபரீதம்!

February 11, 2018
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
6261 Views

சென்னை அரும்பாக்கத்தில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் பைக்கில் வந்த கொள்ளையர்கள் 15 சவரன் நகையை கொள்ளையடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை தங்க சாலையைச் சேர்ந்த மேனகா என்பவர், அரும்பாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு இன்று காலை வந்துள்ளார். அப்போது பாஞ்சாலியம்மன் தெருவில் வந்து கொண்டிருக்கும்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் மேனகாவின் கழுத்தில் இருந்த சுமார் 15 சவரன் நகைகளை பறித்து சென்றுள்ளனர். 

நகையை பறிக்கும்போது கீழே விழுந்த மேனகாவை நகைக் கொள்ளையர்கள் விடாமல் தரதரவென இழுத்துச் சென்று தங்கச் செயினை பறித்தனர். சுமார் 100 மீட்டர் இவ்வாறு மேனகா கொடூரமாக இழுத்தச் செல்லப்பட்டதில், அவருக்கு, கழுத்து, கை, முதுகு போன்ற பகுதிகளில் காயம் ஏற்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். 

இந்த கொள்ளை குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. இச்சம்பவம் குறித்த புகாரின் பெயரில், கோயம்பேடு போலீசார் விசாரணை நடத்தி  வருகின்றனர்.

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

வி.கே.சசிகலாவின் கணவரும், 'புதியபார்வை' இதழின் ஆசிரியருமான

விஷ்வ ஹிந்து பரிஷத்தின் ராமராஜ்ஜிய ரத யாத்திரை நாளை தமிழகம்

ஆன்லைன் பத்திரப்பதிவில் உள்ள குளறுபடிகள் 10 நாட்களில்

கிருஷ்ணகிரி அருகே பீர் பாட்டிலில் பாம்பு கிடந்ததால் மது

கடன் வாங்கி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு நினைவு மண்டபம்

தற்போதைய செய்திகள் Mar 20
மேலும் படிக்க...

Tamilrathna

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 74.87 (லி)
  • டீசல்
    ₹ 66.21 (லி)