இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

​பள்ளியில் இருந்தே பெண்களுக்கு பாலியல் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்: சரத்குமார்

February 11, 2018 Posted By : arun Authors
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
2191 Views

பள்ளியில் இருந்தே பெண்களுக்கு பாலியல் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று நடிகர் சரத்குமார் கூறியுள்ளார். 

பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி இன்று காலை சென்னையில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. வேளச்சேரியில் உள்ள தனியார் ஹோட்டலில் தொடங்கி குருநானக் கல்லூரி வரை நடைபெற்ற மாரத்தானில் நூற்றுக்கணக்கானோர் ஆர்வமுடன் பங்கேற்றனர். 

சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் சரத்குமார், சித்தார்த், வரலட்சுமி சரத்குமார், பிந்து மாதவி ஆகியோர் கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சரத்குமார், பெண்களுக்கு பல இடங்களிலும் பாலியல் துன்புறுத்தல்கள் உள்ளதாகவும், இவை தடுக்கப்பட வேண்டும் எனக் கூறினார். 

பள்ளிகளில் இருந்தே பாலியல் கல்வியை கற்பித்தால், அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் எனக் கூறிய சரத்குமார், அவ்வாறு புரிந்து கொள்ளும் பட்சத்தில் பாலியல் துன்புறுத்தல்கள் நடக்க வாய்ப்பில்லை எனவும் தெரிவித்தார்.

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )