இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Breaking News

Jallikattu Game

பாடகி சின்மயிக்கு ஆதரவாக களமிறங்கிய தமிழிசை - ஹெச்.ராஜா

October 11, 2018 எழுதியவர் : manoj எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
27755 Views

#MeToo என்ற ஹாஸ்டேக்கில் வெளியாகி வரும் சர்ச்சைகள் தொடர்பாக பாடகி சின்மயிக்கு பாஜக தலைவர்களான தமிழிசை சவுந்தரராஜனும், ஹெச்.ராஜாவும் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆதரவு தெரிவித்துள்ளனர். 

நாட்டில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருவது, பாடகி சின்மயி வெளியிட்டு வரும் பாலியல் புகார் தொடர்பான ட்வீட்டுகள் தான். பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் புகார் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் சின்மயி பகிர்ந்ததை தொடர்ந்து, உலகளவில் ட்ரெண்டாகி வந்த #MeToo என்ற ஹாஸ்டேக் தமிழத்திலும் பிரபலமாகி இருக்கிறது. இது தொடர்பாக பல்வேறு கருத்துகள் உலா வந்த நிலையில், நேற்று வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில்,

“அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும்.” என்று பதிவிட்டு இதற்கு தொடக்கமாகவும், முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவும் பதிலளித்திருந்தார். 


இதனை தொடர்ந்து வைரமுத்து பகிர்ந்த கருத்தை ரீட்வீட் செய்து “Liar" (பொய்யானவர்) என்று பதிவிட்டு மீண்டும் சின்மயி இதை தொடர தற்போது விவகாரம் மேலும் சூடுப்பிடிக்க தொடங்கியுள்ளது.
 
அரசியல்வாதிகள் அனைவரையும் விமர்சனம் செய்யும் திரைத்துறையினர் நடிகர்கள் தங்கள் துறையில் நடந்துள்ள தவறுகளை கண்டு கொள்ளாதது ஏன்?? எனவும் பாடகி சின்மயின் கருத்து கவனிக்கப்பட வேண்டியது, நிச்சயம் விசாரிக்கப்பட வேண்டியது என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சின்மயிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். 
 
மேலும், Me too தொடர்பாக எம்.ஜே.அக்பர் பற்றி கால் பக்க கட்டுரை எழுதிய இமாம் அலிக்கு முழுபக்க விளம்பரம் தந்த பத்திரிகை, சின்மயி புகார் பற்றி மௌனம் ஏன்?? என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தற்போது கருத்து தெரிவித்திருப்பது சின்மயிக்கு மேலும் ஒரு ஆதரவு குரல் என்றாலும், இந்த பாதை சினிமா, அரசியல் பஞ்சாயத்திற்கு வித்திட்டுள்ளதாக வலைதளவாசிகள் கருத்து கூறி வருகின்றன.
 

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

தற்போதைய செய்திகள் Oct 23
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )