இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Breaking News

Jallikattu Game

குட்கா முறைகேடு விவகாரம்: விழுப்புரம் எஸ்.பி. ஜெயக்குமாருக்கு சிபிஐ சம்மன்!

October 11, 2018 எழுதியவர் : nandhakumar எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
793 Views

குட்கா முறைகேடு விவகாரத்தில் விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் இன்று விசாரணைக்கு நேரில் ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.

குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், உயர் போலீஸ் அதிகாரிகள் சிலரின் உதவியுடன் விற்கப்பட்டதாகவும் இதில் பல கோடி ரூபாய் லஞ்ச பரிமாற்றம் நடந்துள்ளதாகவும் சர்ச்சை எழுந்துள்ளது.

இந்த விவகாரத்தில் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை மாநகர முன்னாள் காவல்ஆணையர் ஜார்ஜ், விழுப்புரம் மாவட்ட எஸ்.பி.ஜெயக்குமார் உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வரும் சிபிஐ குட்கா குடோன் உரிமையாளர் மாதவராவ் உள்ளிட்டோரை ஏற்கனவே கைது செய்தது.

இந்நிலையில் குட்கா முறைகேடு விசாரணைக்காக விழுப்புரம் மாவட்ட எஸ்.பி.ஜெயக்குமார் இன்று நேரில் ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. அவர் இன்று சிபிஐயின் சென்னை பெசண்ட் நகர் அலுவலகத்தில் ஆஜராக உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

தற்போதைய செய்திகள் Oct 23
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )