இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Breaking News

Jallikattu Game

கீழடி அகழ்வாராய்ச்சியில் 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தங்க நகைகள் கண்டெடுப்பு!

October 11, 2018 எழுதியவர் : nandhakumar எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1354 Views

கீழடியில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தங்க நகைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவித்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் கீழடியில்  அகழ்வாராய்ச்சியை தொடர உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கைவிடுத்து சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் கனிமொழிமதி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் சுந்தரேஷ், சதீஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று நடைபெற்றது. அப்போது தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் புகழேந்தி ஆஜராகி கீழடி அகழ்வாராய்ச்சி தொடர்பாக சில விளக்கங்களை அளித்தார்.

கீழடியில் இதுவரை 4 கட்ட அகழ்வாராய்ச்சி முடிந்து 5ம் கட்ட அகழ்வாராய்ச்சியை நடத்த மத்திய அரசின் ஒத்துழைப்பிற்காக தொல்லியில் துறை காத்திருப்பதாகவும் கூறினார். பழங்காலத்தைச் சேர்ந்த 7 ஆயிரம் பொருட்கள் இந்த அகழ்வாராய்ச்சியில் கிடைத்துள்ளதாகவும் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது எனக் கருதப்படும் தங்க நகைகளும் அதில் அடக்கம் என்றும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

எனினும் அந்த தங்க நகைகளின் காலத்தை உறுதி செய்ய அவை அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஆராய்ச்சி மையத்திற்கு கொண்டு செல்லப்பட உள்ளதாகவும் தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

தற்போதைய செய்திகள் Oct 23
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )