முகப்பு > தமிழகம்

“கீழடி அகழ்வாய்வில் கிடைத்த உண்மைகள் திகைக்க வைக்கின்றன” : வைகோ

January 11, 2017

“கீழடி அகழ்வாய்வில் கிடைத்த உண்மைகள் திகைக்க வைக்கின்றன” : வைகோ


சிவகங்கை அருகே நடைபெற்று வரும் கீழடி அகழ்வாய்வுகளை மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

டெல்லியில் மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் மகேஷ் சர்மாவை நேரில் சந்தித்த வைகோ இது தொடர்பான கோரிக்கை மனுவையும் அளித்தார். 

அந்த அறிக்கையில் வைகை நதிக்கரை நாகரீகம் சிந்துவெளி நாகரீகம் போன்று மிகப்பழமையானது என்று குறிப்பிடுள்ள வைகோ, பாபிலோனா நகரத்தைவிட பழமையான நகரமான காவிரி பூம்பட்டினம் குறித்து சேனல் 4 நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கீழடி அகழ்வாய்வில் கிடைத்த பொருட்களில் சங்க கால தமிழர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளதாகவும், அகழ்வாய்வு நடைபெறும் 110 ஏக்கர் பரப்பு முழுக்க ஆய்வு மேற்கொண்டால் மேலும் பல உண்மைகள் தெரிய வரும் என்றும் வைகோ அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

கீழடி ஆய்வில் மிகுந்த ஆச்சர்யம் தரும் அம்சமாக கழிவுநீர் கால்வாய்கள் இருந்ததை சுட்டிக்காட்டியுள்ள வைகோ, மேலும் 10 ஆண்டுகளுக்கு கீழடியில் அகழ்வாய்வு மேற்கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்