முகப்பு > தமிழகம்

சென்னை வேளச்சேரியில் டிராவல்ஸ் அலுவலகத்திற்குள் புகுந்து ஊழியர்களை தாக்கிய மர்ம நபர்கள்!

January 11, 2017

சென்னை வேளச்சேரியில் டிராவல்ஸ் அலுவலகத்திற்குள் புகுந்து ஊழியர்களை தாக்கிய மர்ம நபர்கள்!


சென்னை வேளச்சேரியில் டிராவல்ஸ் அலுவலகத்திற்குள் புகுந்து 4 பேர் கொண்ட மர்ம கும்பல் உரிமையாளரையும், ஊழியர்களையும் சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

வேளச்சேரியில் சையது உசேன் என்பவர் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில் இவரது நிறுவனத்துக்குள் புகுந்த மர்ம கும்பல் சையது மற்றும் நிறுவன ஊழியர்களை சரமாரியாக தாக்கினர். 

இதில் காயமடைந்த உரிமையாளர் உசைன் மற்றும் ஊழியர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதனை தொடர்ந்து அந்த கும்பல் சையது உசைன் வீட்டிற்கு சென்று அங்குள்ளவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். 

சம்பவம் குறித்து தகவலறிந்த வேளச்சேரி போலீசார் சிசிடிவி காட்சிகளை கொண்டு ராமசாமி மற்றும் டால்பின் சுரேஷ் ஆகிய இருவரை கைது செய்துள்ளனர். இவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இது தவிர தப்பியோடிய ஆனந்த் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Categories : தமிழகம் : தமிழகம்

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்