இன்றைய வானிலை

  • 26 °C / 79 °F

Jallikattu Game

பொங்கல் பண்டிகைக்காக சென்னையில் இருந்து இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

January 11, 2017
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
940 Views

பொங்கல் பண்டிகைக்காக, சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக இன்று முதல் நாளை மறுநாள் வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 

சென்னையில் மட்டும் 5 மையங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து இன்று 3,069 பேருந்துகளும், நாளை 4,054 பேருந்துகளும் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. கோயம்பேட்டில் இருந்து திருச்சி, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, குமரி, விழுப்புரம், கோவைக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 

ஆந்திராவுக்கு அண்ணா நகர் மேற்கில் இருந்தும், புதுச்சேரி, கடலூர், சிதம்பரத்துக்கு அடையாறில் இருந்தும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆற்காடு, ஆரணி, வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூருக்கு பூந்தமல்லியில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கும்பகோணம், தஞ்சாவூர் வழியாக செல்லும் பேருந்துகள் தாம்பரம் சானிடோரியத்தில் இருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

சங்கரன்கோவில் சந்தையில், ஒரு கிலோ மல்லிகைப் பூ 6 ஆயிரம் ரூபாய்க்கு

புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள ஓம் பிரகாஷ்

ரஜினி மக்கள் மன்றம் தொடங்கப்பட்ட பின்னர், முதன்முறையாக நிர்வாகிகள்

ஆண்டாள் குறித்து அவதூறாகப் பேசிய வைரமுத்துவுக்கும், அதனை வெளியிட்ட

பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து வரும் 27ந்தேதி திமுக நடத்த

Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 74.91 (லி)
  • டீசல்
    ₹ 66.44 (லி)