முகப்பு > தமிழகம்

தமிழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்: கே.பாண்டியராஜன்

January 11, 2017

தமிழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்: கே.பாண்டியராஜன்


தமிழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என, தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் வளாகத்தில், நற்பண்புகளை இணைத்து கற்றலும், கற்பித்தலும் என்ற தலைப்பில் ஆசிரியர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி கருத்தரங்கு இன்று துவங்கியது. 

இதில் அனைத்து மாவட்டங்களிலிருந்தும், நற்பண்பை பயிற்றுவிக்கும் விரிவுரையாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர். இந்த கருத்தரங்கை துவக்கி வைத்துப் பேசிய தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.பாண்டியராஜன், ஆசிரியர்கள் முன்மாதிரியாக இருந்து மாணவர்களுக்கு, நற்பண்புகளை போதிக்க வேண்டுமென அறிவுறுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என தெரிவித்தார்.

Categories : தமிழகம் : தமிழகம்

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்