முகப்பு > தமிழகம்

கழிவறையில் தங்க வைக்கப்பட்ட தமிழக மீனவர்கள்!

January 11, 2017

கழிவறையில் தங்க வைக்கப்பட்ட தமிழக மீனவர்கள்!


இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை, இலங்கை சிறையில் உள்ள கழிவறையில் தங்கவைத்ததாக தூத்துக்குடி மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

திரேஸ்புரத்தில் இருந்து கடந்த 16ஆம் தேதி செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் 7 மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர். 
 
அப்போது இந்திய எல்லையைத் தாண்டி, இலங்கை எல்லைக்குள் நுழைந்து மீன் பிடித்ததாகக் கூறி அவர்களை கடந்த 21 ஆம் தேதி காலை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். பின்னர் அவர்களை இலங்கை கடற்படையினர் தலைமன்னார் அழைத்து சென்று சிறையிலடைத்தனர். 

பின்னர் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்ட நிலையில், சொந்த ஊரான தூத்துக்குடி வந்து சேர்ந்தனர். 

மாவட்ட ஆட்சியரை சந்தித்து நன்றி தெரிவித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மீனவர்கள், போதிய உணவு அளிக்காமல், இலங்கை கடற்படையினர் தங்களை துன்புறுத்தியதாகவும், சிறையில் உள்ள கழிவறையிலேயே அவர்கள் தங்க வைக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.

தமிழக மீனவர்களை இலங்கை சிறையில் சித்தரவதை செய்து கழிவறையில் தங்க வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories : தமிழகம் : தமிழகம்

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்