முகப்பு > தமிழகம்

தி. நகரில் நடைபாதை கடைகளை உடனடியாக அகற்ற கட்டாயப்படுத்தக்கூடாது என உத்தரவு!

January 11, 2017

தி. நகரில் நடைபாதை கடைகளை உடனடியாக அகற்ற கட்டாயப்படுத்தக்கூடாது என உத்தரவு!


சென்னை தி. நகர் உஸ்மான் சாலையில் உள்ள நடைபாதை கடைகளை உடனடியாக அகற்ற கட்டாயப்படுத்தக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தி. நகர் உஸ்மான் சாலையில் உள்ள நடைபாதை கடைகளை உடனடியாக அகற்ற கட்டாயப்படுத்துவதாக நடைபாதை வியாபாரிகள் சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம், நடைபாதை கடைகளை அகற்றவும் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து, நடைபாதை வியாபாரிகள் சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 

இந்த மனு நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. 

மனுவை விசாரித்த நீதிபதிகள், கடைகளை உடனடியாக அகற்ற கட்டாயப்படுத்த கூடாது என்றும், 8 வாரத்துக்குள் வியாபாரிகளுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் எனவும் சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டனர். 

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்