முகப்பு > தமிழகம்

ரெட்பஸ் டிக்கெட்டுகள் விவகாரம்: ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் விளக்கம்

January 11, 2017

ரெட்பஸ் டிக்கெட்டுகள் விவகாரம்: ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் விளக்கம்


ஆம்னி பேருந்துகளில் ரெட் பஸ் இணையதளம் மற்றும் ஆப் மூலம் பெறப்பட்ட டிக்கெட்டுகள் செல்லாது என வெளியான தகவலுக்கு, ரெட் பஸ் நிறுவனமும் தமிழ்நாடு ஆம்னி பஸ் பேருந்து உரிமையாளர்கள் சங்கமும் மறுப்பு தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக ரெட் பஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், பேருந்து பயணத்தின் தரத்தையும் பாதுகாப்பையும் உயர்த்தும் வகையில், ரெட்பஸ் சேவையில் இருந்து சில பேருந்து நிறுவனங்களை வெளியேற்றுவதாகவும், குறிப்பட்ட தரத்தில் சேவை வழங்காமல் பயணிகளுக்கு அதிருப்தி மற்றும் மோசமான சேவைகளை வழங்கும் 
நிறுவனங்கள் இவ்வாறு நீக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு ரெட்பஸ் இணைப்பு சேவையில் நீக்கப்பட்ட சிலர், ரெட்பஸ் டிக்கெட்டை ஆம்னி பேருந்துகள் ஏற்காது என்ற தவறான தகவலை பரப்பியுள்ளனர் என்றும், அனைத்து ஆம்னி பஸ் பேருந்துகளிலும் தற்போது பொங்கல் நேரத்திலும் அதற்கு பின்னரும் ரெட்பஸ் மூலம் பெறப்பட்ட டிக்கெட் செல்லும் என்றும் விளக்கம் 
அளிக்கப்பட்டுள்ளது.

இதுபோல், தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அப்சல் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரெட்பஸ் தங்களின் மதிப்பிற்குரிய சேவை பங்குதாரர் என்றும், அதன் இணையதளம் மூலம் பெறப்பட்ட டிக்கெட்டுகள் ஆம்னி பேருந்துகளில் செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories : தமிழகம் : தமிழகம்

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்