முகப்பு > தமிழகம்

தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் பெற்றுள்ள செல்வாக்கு குறித்து நடிகர் மயில்சாமி கருத்து!

January 11, 2017

தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் பெற்றுள்ள செல்வாக்கு குறித்து நடிகர் மயில்சாமி கருத்து!


தமிழகத்தில் திராவிடக் கட்சிகளில் ஆதரவு இல்லாமல் தேசிய கட்சிகளால் ஒருபோதும் ஆட்சி அமைக்க முடியாது என்று நடிகர் மயில்சாமி தெரிவித்துள்ளார்.

நியூஸ்7தமிழ் தொலைக்காட்சியில் ஜல்லிக்கட்டு தொடர்பாக இன்று நடைபெற்ற கேள்வி நேரம் விவாத நிகழ்ச்சியில் நடிகர் மயில்சாமி பங்கேற்பாளராக கலந்துக் கொண்டார். அப்போது, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பல்வேறு கருத்துகளையும் அவர் தெரிவித்தார்.

மக்களுக்காக தான் சட்டமே ஒழிய, சட்டத்திற்காக மக்கள் இல்லை என்று குறிப்பிட்ட மயில்சாமி, தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். ஜல்லிக்கட்டு என்பது பல்லாயிரம் ஆண்டு தமிழ் பாரம்பரியத்தின் தொடர்ச்சி என்றும் அவர் குறிப்பிட்டார்.

காளைகளால் வீழ்த்தப்படுவோம் என்று தெரிந்தும் பெற்றோர்கள் தங்களது மகன்களை ஜல்லிக்கட்டுக்கு அனுப்புவதாக பெருமிதமாக தெரிவித்த மயில்சாமி, தமிழக அரசியல் கட்சிகள் ஓரணியில் இதற்காக குரல்கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

தமிழகத்தில் திராவிடக் கட்சிகளில் ஆதரவு இல்லாமல் தேசிய கட்சிகளால் ஒருபோதும் ஆட்சி அமைக்க முடியாது என்று கூறிய மயில்சாமி, தமிழகத்தின் அரசியல் கட்சிகள் அனைத்தும் கைவிட்டதாக உணர்ந்ததாலேயே மக்கள் தெருவில் இறங்கி போராடி வருவதாகவும், தமிழக அரசியல் கட்சிகள் ஜல்லிக்கட்டு விஷயத்தில் ஒன்றிணைய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Categories : தமிழகம் : தமிழகம்

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்