முகப்பு > தமிழகம்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த வழக்கு ஒத்திவைப்பு

January 11, 2017

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த வழக்கு ஒத்திவைப்பு


மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தொடரப்பட்ட வழக்கு, தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் பெருநகர் குற்றவியல் நீதிமன்றத்தில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி கீதா தாக்கல் செய்த மனு, இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. ஏற்கனவே, இது தொடர்பாக, ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில், புகார் அளிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி கடந்த முதல் தேதி, ஆயிரம்விளக்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் நகலை, வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி, நீதிபதி சந்திரன் முன்பு சமர்ப்பித்தார். அதனைப் பார்வையிட்ட நீதிபதி, புகார் தொடர்பாக சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், உயர் அதிகாரிகளிடம் புகார் அளிக்குமாறு, நீதிபதி சந்திரன் வழிகாட்டினார். இதனையடுத்து இந்த மனு மீதான விசாரணை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

Categories : தமிழகம் : தமிழகம்

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்