முகப்பு > தமிழகம்

விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி சீமான் போராட்டம்

January 11, 2017

விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி சீமான் போராட்டம்


விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, நாம் தமிழர் கட்சியின் சார்பாக சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை வகித்தார். 

விவசாயிகளுக்கு வழங்கப்படும் இழப்பீடு தொகை போதுமானதாக இல்லை எனவும், ஆளும் அரசு, விவசாயிகள் தற்கொலையை தடுக்க தவறிவிட்டது என்றும் சீமான் குற்றச்சாட்டினார். 

தமிழகத்தின் மீது மத்திய அரசு பாரபட்சமாக நடந்து கொள்வதாகக் கூறிய அவர், நாட்டுக்காளைகளை மத்திய அரசு அழிக்க துடிப்பது ஏன்? எனவும் கேள்வி எழுப்பினார். மேலும் தன்னெழுச்சியாக போராடும் இளைஞர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதற்கும் சீமான் கண்டனம் தெரிவித்தார்.

Categories : தமிழகம் : தமிழகம்

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்