முகப்பு > தமிழகம்

வறட்சி நிவாரண மனுவை பிரதமரிடம், முதலமைச்சர் நேரில் வழங்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

January 11, 2017

வறட்சி நிவாரண மனுவை பிரதமரிடம், முதலமைச்சர் நேரில் வழங்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்


தமிழகத்தை வறட்சி மாநிலமாக கருதி மத்திய அரசிடம் நிதியுதவி கோரும் மனுவினை முதலமைச்சர் பிரதமரை நேரில் சந்தித்து வழங்க வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களும் வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக முதல்வர் அறிவித்ததற்கு ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். மத்திய அரசின் நிதியுதவி கோரி மனு தயார் செய்யப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள ஸ்டாலின், கோரிக்கை மனுவை தயார் செய்து 

முதலமைச்சரே நேரடியாகச் சென்று பிரதமரிடம் வழங்கவேண்டும் என கேட்டுகொண்டுள்ளார். இதனை தாமதிக்கும் ஒவ்வொரு நாளும் விவசாயிகள் தற்கொலை அதிகரிக்கும் எனவும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Categories : தமிழகம் : தமிழகம்

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்