முகப்பு > தமிழகம்

ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் முதலமைச்சருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

January 11, 2017

ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் முதலமைச்சருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்


தமிழக சட்டமன்ற குழுக்களை அமைக்க கோரி எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் முதல்வரும், அவை முன்னவருமான ஓ.பன்னீர்செல்வத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தமிழக அரசு பொறுப்பேற்று 15 நாட்களுக்குள், சட்டமன்ற குழுக்கள் அமைக்க வேண்டும் என்ற விதிமுறைகள் இருந்தும், தமிழக அரசு 5 மாதங்கள் ஆகியும், சட்டமன்ற நிலைக்குழு, உரிமைக்குழு உள்ளிட்ட 12 குழுக்களை அமைக்கவில்லை என கூறி, தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உயர்நீதிமன்றத்தில் 
வழக்கு தொடர்ந்திருந்தார்.  

இந்த வழக்கு விசாரணை  நீதிபதி ராஜேந்திரன் முன்பாக இன்று வந்தது. அப்போது,சட்டமன்ற குழுக்கள் அமைப்பது தொடர்பாக, சட்டபேரவை முன்னவர் ஒ.பன்னீர்செல்வம், தலைமை செயலாளர் கிரீஜா வைத்தியநாதன், சட்டப்பேரவை செயலாளர் ஜமாலுதீன் ஆகியோர் ஒரு வாரத்திற்குள் பதிலளிக்க பதிலளிக்க, நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். வழக்கின் அடுத்த விசாரணையை வரும் புதன்கிழமை வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories : தமிழகம் : தமிழகம்

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்