முகப்பு > தமிழகம்

அவசரச் சட்டம் கொண்டுவராத பட்சத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதில் தவறில்லை - அன்புமணி ராமதாஸ்

January 11, 2017

அவசரச் சட்டம் கொண்டுவராத பட்சத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதில் தவறில்லை - அன்புமணி ராமதாஸ்


மத்திய அரசு அவசரச்சட்டம் கொண்டுவராத பட்சத்தில் தடையைமீறி ஜல்லிக்கட்டு நடத்துவதில் எந்த தவறும் இல்லை என பாமக நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை கோயம்பேடு வணிக வளாகத்தில் வியாபாரிகள் நலச் சங்கம் சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விவசாயிகள் தற்கொலை செய்து வரும் சூழலில் பொங்கல் பண்டிகை கொண்டாவது சரியானது அல்ல என தெரிவித்தார்.

வறட்சி மாநிலமாக மாநில அரசு அறிவித்தது மட்டுமின்றி மத்திய அரசும் அறிவித்து அதற்கான நிதியை உடனடியாக வழங்க வேண்டும் எனவும் அன்புமணி கேட்டுகொண்டார்.

 

Categories : தமிழகம் : தமிழகம்

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்