இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

​திமுக தலைவராகப் போகும் ஸ்டாலினின் சித்தாந்த ரீதியான செயல்பாடுகள் என்னென்ன?

August 10, 2018 எழுதியவர் : priyadharshini எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1557 Views

திமுகவின் தலைவர் கருணாநிதி மறைந்த நிலையில் அடுத்த தலைவராக  ஸ்டாலின் பொறுப்பேற்பார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தேசிய அரசியலிலும், சித்தாந்த ரீதியாகவும் ஸ்டாலின் செயல்பாடுகளில் உள்ள சவால்கள் குறித்து விவரிக்கிறது இந்த காட்சித் தொகுப்பு.

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவையடுத்து திமுக அடுத்த பரிணாமத்திற்கு தயாராகியிருக்கிறது. தற்போது திமுக செயல் தலைவராக இருக்கும் ஸ்டாலின் விரைவில் நடக்க இருக்கும் திமுக பொதுக்குழுவில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் திமுக தலைவராக இருக்கும் ஸ்டாலின் அதிகமான சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும் என்று கருதப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கருணாநிதி உடல் நலம் சரியில்லாமல் ஓய்வெடுத்த காலங்களில் திமுக செயல் தலைவராக கட்சியை வழிநடத்தியது ஸ்டாலினுக்கு பலமாக கருதப்படுகிறது. 

அரை நூற்றாண்டாக திமுகவை வழிநடத்திய கருணாநிதியின் கொள்கைகளை முன்னெடுக்க வேண்டிய பொறுப்பு ஸ்டாலினுக்கு உண்டு. தேசிய அரசியலில் தவிர்க்க முடியாதவராக இருந்தார் கருணாநிதி. 70 களில் இந்திரா காந்தியின் அரசை ஆதரித்து காப்பாற்றியது தொடங்கி தேசிய அரசியலை தீர்மானிக்கும் முக்கியமான சக்தியாக கருணாநிதியும், திமுகவும் இருந்தனர்.

அதே போல் 1989ல் ராஜிவ் காந்தியின் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து மாநிலக் கட்சிகளின் கூட்டணியை அமைத்ததில் கருணாநிதியின் பங்கு முக்கியமானது. இப்போது மத்தியில் ஆட்சியிலிருக்கும் பாஜகவை எதிர்த்து எதிர்க்கட்சிகள் தேசிய அளவில் ஒன்றிணைய முயன்று வருவது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் முக்கியமான மாநிலக் கட்சிகளில் ஒன்றான திமுகவின் பங்கை இதில் மற்ற கட்சிகள் உணர்ந்தே இருக்கின்றன. எதிர்க்கட்சிகளின் கூட்டணி முயற்சி தொடர்பாக பல்வேறு மாநிலக் கட்சிகளின் தலைவர்கள் ஏற்கனவே ஸ்டாலினை சந்தித்து இருக்கின்றனர். 

மேலும் நூற்றாண்டு கண்ட திராவிட இயக்கத்தின் முகமாகவும் செயல்பட வேண்டிய அவசியம் திமுகவுக்கும் ஸ்டாலினுக்கும் இருக்கிறது. பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரால் வழிநடத்தப்பட்ட திராவிட நான்காம் தலைமுறை முகமாக அறியப்படும் ஸ்டாலினுக்கு திராவிட சித்தாந்தத்தை காக்கும் கடமை இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 

மேலும் கருணாநிதியின் இறப்பிற்கு பிறகு ஸ்டாலினின் செயல்பாடுகள் நிதானமாக இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள். கருணாநிதியை மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதி கோரி முதல்வர் பழனிசாமியை நேரில் சந்தித்தது தொடங்கி, அனுமதி மறுக்கப்பட்ட போது அதற்கு சட்டப்பூர்வ போராட்டம் நடத்தி வெற்றி கண்டது என அவரது நிதானமான முடிவுகள் கவனிக்கத்தக்கது.

அதே போல் ராஜாஜி ஹாலில் பாதுகாப்புக் குறைபாடு காரணமாக நெரிசல் ஏற்பட்ட போது தொண்டர்களை ஸ்டாலின் அமைதிப்படுத்திய விதம் பலராலும் பாராட்டப்பட்ட நிலையில் மற்ற சவால்களையும் ஸ்டாலின் சமாளிப்பார் என்றே கூறப்படுகிறது.

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )